நடிகை நஸ்ரியாவுக்கும் பிரபல இயக்குனர்
பகத் பாசில் மகன் பகத் பாசிலுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்நிலையில் பகத் பாசில் நடிக்க வேண்டிய ஒரு படத்தில் ஆர்யா நடிக்க
ஒப்புக்கொண்டுள்ளார். நஸ்ரியாவுடன் தேனிலவு கொண்டாட இருப்பதால் பகத் பாசில்
இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
பிரபல மலையாள இயக்குனர் ஜோஸ் பெல்லிஸோரி இயக்கும் திரைப்படம் டபுள் பேரல். இந்த படத்தில் இரண்டு முக்கிய கேரக்டர்களில் பிருத்விராஜ் மற்றும் பகத் பாசில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நஸ்ரியாவுடன் திருமணம் செய்த பகத் பாசில், தேனிலவுக்காக அமெரிக்கா சென்றுள்ளதால், பகத் பாசில் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆர்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்யாவும் பிருத்விராஜும் ஏற்கனவே உறுமி என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், ஆர்யா இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.

தேனிலவுக்கு சென்றதால் படத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தி அறிந்து பகத் பாசில் மற்றும் நஸ்ரியா அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment