அதிகம் சம்பாதித்த நடிகைகள் பற்றிய கருத்து கணிப்பு நடந்தது. இதில் அனுஷ்கா முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் ரூ.15 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
தமிழில் லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார். அனுஷ்காவை விட நயன்தாராதான் அதிக சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவருக்கு விளம்பர படங்கள் இல்லை. அனுஷ்கா சினிமாவில் நடிப்பதோடு விளம்பர படங்களில் நடித்தும் பணம் சம்பாதிக்கிறார். எனவே எல்லோரையும் மிஞ்சி இருக்கிறார்.
அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் கருத்து கணிப்பில் சமந்தா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். காஜல்அகர்வால், தமன்னா போன்றோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
0 comments:
Post a Comment