பீட்சா’ படம் மூலம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. அதைத்தொடர்ந்து இவர் நடித்து வெளிவந்த எல்லா படங்களும் வெற்றிநடை போட்டதால் தற்போது தமிழில் பிசியான நடிகராக உள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த சினிமா விழாவொன்றில் விஜய் சேதுபதியிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு நடிகையை கடத்தச்சொன்னால் யாரை கடத்துவீர்கள்? என்று கேட்டார். விஜய் சேதுபதி தாமதிக்காமல் நயன்தாராவை கடத்துவேன் என்று பதில் அளித்தார்.
அந்த விழாவில் நயன்தாராவும் இருந்தார். விஜய் சேதுபதி பேச்சை கேட்டு அவர் சிரித்தார். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் விஜய்சேதுபதியிடம் அப்போதிலிருந்தே இருந்தது, அது தற்போது நிறைவேறுகிறது.
தனுஷ் தயாரிக்கும் புது படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘நானும் ரவுடி தான்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ‘போடா போடி’ படத்தை எடுத்த விக்னேஷ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். தனுஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
தனுஷ் சமீபத்தில் தயாரித்து நடித்த ‘வேலை இல்லா பட்டதாரி’ படம் பலத்த வரவேற்பை பெற் றது. வசூலும் குவித்தது. இதைத்தொடர்ந்து நயன்தாரா விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment