Saturday, 23 August 2014

நீச்சல் உடையில் நடித்த சமந்தாவுக்கு எதிர்ப்பு

சமந்தா நடித்த அஞ்சான் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. தெலுங்கில் இப்படம் சிக்கந்தர் என்ற பெயரிலும் ரிலீசாகியுள்ளது.
இதில் சமந்தா நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரது நீச்சல் உடை கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் வேகமாக பரப்பி உள்ளது.
நடிகைகள் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது சகஜம். ஆனால் சமந்தாவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர்களில் அவரை திட்டி தீர்த்தும் கேவலமாக விமர்சித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனால் சமந்தா அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

தெலுங்கு ரசிகர்கள் தான் சமந்தா மேல் அதிக கண்டன கணைகளை வீசுகிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த படத்தின் போஸ்டர் ஒன்று ஐதராபாத்தில் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்த சமந்தா ஆவேசமானார். அதில் மகேஷ்பாபுவின் காலடியில் நடிகை கீர்த்தி கவர்ச்சி உடையில் தவழ்ந்து செல்வது போல் இருந்தது. இது பிற்போக்குத்தனமான போஸ்டர் என்று சமந்தா எதிர்த்தார். அப்படிப்பட்டவர் தமிழ் படத்தில் ஏன் நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சித்து உள்ளனர்

0 comments:

Post a Comment