ஒடிஸாவில் மனைவி டீ கொடுக்க தாமதமானதால் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸாவின் தென்கனல் மாவட்டத்தில் 56 வயதான மகிலா நாயக் என்னும் நபர், அவருடைய மனைவியிடம் தனக்கு டீ தரும்படி கேட்டுள்ளார்.
மனைவி டீ கொடுக்க தாமதமானதால் ஆத்திரம் அடைந்த அந்நபர் தன் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்த நிலையில் அந்நபரின் மனைவி இனி உணவு சமைக்க முடியாது எனக் கூறிவிட்டார்.
தொடர்ந்து மனைவியோடு இதே காரணத்திற்காக சண்டையிட்டு வந்த நபர் ஒரு கட்டத்தில் மனைவியை கூர்மையான ஆயுதத்தை வைத்து கொலை செய்ததாக தெரிகிறது.
மகிலா நாயக் கொலை செய்தததாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment