Saturday, 23 August 2014

சுருதியை எட்டி உதைத்த குதிரை -பதறிப்போன அம்மணி -காயமினிரி தப்பினார்

தேவார் என்ற இந்தி படத்தில் சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுகிறார். இந்த படத்தில் நாயகனாக அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இவர் போனிகபூரின் மகன் ஆவார்.
குத்தாட்ட பாடலுக்காக படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடிந்தது. சுற்றிலும் குதிரைகளை நிற்க வைத்து நடுவில் சுருதிஹாசனும், அர்ஜூன் கபூரும் ஆடுவது போன்று இக்காட்சியை எடுத்தனர்.
அப்போது ஒரு குதிரை சுருதிஹாசனை நோக்கி வேகமாக வந்தது. திடீரென காலால் எட்டி உதைத்தது. இதனை பார்த்த அர்ஜூன் கபூர் பாய்ந்து சென்று சுருதிஹாசனை பிடித்து இழுத்து காப்பாற்றினார். இதனால் காயமின்றி சுருதிஹாசன் தப்பினார்.
தன்னை காப்பாற்றிய அர்ஜூன் கபூருக்கு சுருதி நன்றி தெரிவித்தார்.

சுருதிஹாசன் தமிழில் ‘பூஜை’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. நான்கு இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

0 comments:

Post a Comment