Wednesday, 27 August 2014

கட்டாய உடலுறவு

பெண்கள் போகப் பொருளாகவே கருதப்படுவதால் எவ்வளவு தூரம் அவர்களைத் தலைக்கு மேல் தூக்கி வைக்கிறார்களோ அவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தவும் செய்கிறார்கள். உலகம் முழுவதும் பல பெண்களும் விருப்பம் இல்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கபடுகிறார்கள். பெரும்பாலும் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்பந்திக்கிறார்கள். சில இடங்களில் இதை இவ்வாறு நிர்பந்திக்கிறார்கள். சில இடங்களில் இதை காதலனின் பலாத்காரம் என்று அழைக்கின்றனர்.
இந்த நிர்பந்தம் உடல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வுகளாலும், வார்த்தைகளாலும், கூட அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். விருப்பம் இல்லாமல் யாரையும், யாரும் பாலலுறவுக்கு நிர்பந்திக்க கூடாது. மனைவி என்றாலும் அவளது அனுமதி இல்லாமல் உறவு கொள்ள கூடாது.
தற்போது தான் பெண்களுக்கும் இன்பம் தரவேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அது போல் உச்சகட்ட இன்பமும் பெறுவது தங்களுக்கும் சாத்தியம் என்பதைப் பெண்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். கணவனிடம் இருந்து எப்படி உச்சகட்ட இன்பத்தை பெறுவது என்பதிலும் பெண்கள் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகும்.

0 comments:

Post a Comment