Friday, 29 August 2014

ஆண்களின் ஆண் உறுப்பை வெட்டுங்கள் -பிரபல நடிகை பர பரப்பு பேட்டி

ஆண்களின் ஆண் உறுப்பை வெட்டுங்கள் -பிரபல நடிகை பர பரப்பு பேட்டி
நாய்களை அடித்து துன்புறுத்தும் ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார். விலங்குகள் மீது அளவு கடந்த பாசம் கொண்ட பாலிவுட் நடிகை இஷா குப்தாவிற்கு யாராவது விலங்குகளை அடித்து துன்புறுத்தினால் கோபம் வந்துவிடும். இதுகுறித்து அவர் கூறியதாவது, எங்கள் வீ்ட்டில் 4 நாய்கள் உள்ளன. அதில் 2 தெருவில் இருந்து எடுத்து வரப்பட்ட நாய்கள். எங்கள் வீட்டு நாய்களில் ஒன்று அண்மையில் இறந்துவிட்டது. அந்த மரணம் என்னை காயப்படுத்தியது. இந்நிலையில் நபர் ஒருவர் நாயை அடித்து துன்புறுத்தும் காணொளியை எனக்கு ஒப்பனை செய்பவர் என்னிடம் காண்பித்தார். அதை பார்த்த எனக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. ஏனெனில் வாய் பேச முடியாத விலங்களுக்கு ஆதரவு அளிப்பவள் நான். அந்த நாயை அடித்து துன்புறுத்தியதால் அதன் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே அடிக்கு அடி தான் சரி என்பதால் நாய்களை அடிக்கும் அந்த நபரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும் என்றும் கொடுமைப்படுத்திய நபரை பிடித்து தருபவருக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானமாய் வழங்குகிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் பெண்களின் கற்பை சூறையாடும் காமுகர்களுக்கு மரண தண்டனை விதிப்பது போதாது. அரபு நாடுகளை போல் அவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். -

0 comments:

Post a Comment