தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் பாவனா நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடித்தார். மலையாளம், கன்னட படங்களிலும் நடித்தார்.
‘அங்க்ரி பேபிஸ் இன் லவ்’ என்ற மலையாள படத்தில் நடித்தபோது அப்படத்தின் கதாநாயகன் அனூப் மேனனுடன் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து காதல் வளர்ப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
பாவனா புதுப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கப் போகிறார் என்றும் செய்தி பரவியது. அடுத்த வருடம் துவக்கத்தில் அனூப்மேனனுக்கும், பாவனாவுக்கும் திருமணம் நடக்க உள்ளது என்றும் செய்தி வெளியானது.
இதனை பாவனா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:–
எனக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதில் உண்மை இல்லை. என் அண்ணனுக்குத்தான் அடுத்த வருடம் திருமணம் நடக்கிறது. இதை வைத்து எனக்கு திருமணம் நடக்கிறது என்று தவறாக நினைத்து விட்டனர். நிறையபேர் எனக்கு போன் செய்து திருமணம் செய்து கொள்ள போகிறீர்களாமே என விசாரித்தனர்.
எனக்கு திருமணம் இப்போதைக்கு இல்லை. திருமணம் முடிவானதும் அதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்.
இவ்வாறு பாவனா கூறினார்.
0 comments:
Post a Comment