தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவர் தற்போது பூஜை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜயுடன் ஜோடி சேரவுள்ளார். பின்னர் கார்த்தியுடன் ஒரு படத்தில் ஜோடி சேரவுள்ளதாகவும் செய்திகள் வந்தது.
கார்த்தி தற்போது ‘கொம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடிந்த பிறகு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க சுருதிஹாசனிடம் பேசி வருகின்றனர். மேலும் காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுவிடமும் பேசி வருகின்றனர்.
கார்த்தி படத்தில் சுருதிஹாசன், வடிவேலு நடிப்பது இதுவே முதல் முறையாகும். சுருதிஹாசனை ஒரு தலையாக வடிவேலு காதலிப்பது போல் காட்சிகளை வைக்க படக்குழுவினர் முடிவுசெய்துள்ளார்களாம்
0 comments:
Post a Comment