திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் பூவார் பகுதியை சேர்ந்தவர் மினி (வயது 34). இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவரது 17 வயது மகள் தாயுடன் வசித்து வந்தார்.
பூவார் அருகில் உள்ள செங்க விளையை சேர்ந்தவர் சிஜு (34) இவர் திருவனந்தபுரம் நகரசபையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மினியின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி பல்வேறு இடங்களுக்கு சிஜு அழைத்து சென்றார்.
மேலும் தனது நண்பர் ரிஜு (27)வின் வீட்டிற்கு தனது காதலியை அழைத்து சென்ற சிஜு அங்கு வைத்து அவரை கற்பழித்தார். மேலும் தனது நண்பர் ரிஜுக்கும் காதலியை விருந்தாக்கினார். இந்த கொடூர செயலால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கூறினார்.
அவரது உத்தரவுப்படி பூவார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த கற்பழிப்பு வழக்கு தொடர்பாக சிஜுவும், அவரது நண்பர் ரிஜுவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment