Sunday, 24 August 2014

திருமணம் செய்வதாகக் கூறி பல பெண்களுடன் வாலிபர் உல்லாசம்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
மும்பை சார்க்கோப் மகாடா காலனியை சேர்ந்த 31 வயது பெண், தனது காதலர் சந்தீப்(வயது32) என்பவருடன் ஒரே வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சந்தீப்பை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இந்தநிலையில் சந்தீப் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் சந்தீப் குறித்த தகவல் எதுவும் அந்த பெண்ணுக்கு கிடைக்கவில்லை. இந்தநிலையில் ரத்னகிரி பகுதியில் சந்தீப் இருப்பதாக அந்த பெண்ணுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சந்தீப்பை தேடி ரத்னகிரி சென்றார்.
அங்கு சென்ற அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சந்தீப்புக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள், 4 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதில் ஒரு மனைவி 2 குழந்தைகளுடன் கோரேகாவிலும், மற்றொரு மனைவி மலாடு பகுதியில் 2 குழந்தைகளுடன் வசித்து வருவதும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த அந்த பெண் சார்க்கோப் காவல் நிலையத்தில் சந்தீப் மீது புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சந்தீப் இதுபோன்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சந்தீப்பை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment