Thursday, 28 August 2014

பெண்கள் எப்படியானவர்கள் என கண்டு பிடிக்க இதோ சில வழிகள்

பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம் தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் அவர்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். பெண்களை முழுவதும் புரிந்து கொண்டு.
நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன. நீங்கள் அந்த பெண்ணிடம் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருக்கும். உங்கள் அன்பை முழுமையாக அவர்களுக்கு அளித்தால் உங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு தன்னை பற்றி சொல்ல முன் வருவார்கள்.
நீங்கள் அவர்களிடம் கனிவாகவும், அன்புடனும் புரிதலுடனும் இருப்பது தான் முக்கியமாகும். ஒரு பெண்ணிடம் வெளிப்படையாக அணுகுவதே நல்லது. இதனால், அவர்களிடம் சிறு காரியங்களுக்கு ரியாக்ட் செய்து அவர்களை வருத்தப்படச் செய்யாதீர்கள்.
ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படும். ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள தேவைப்படுவது பொறுமைதான். ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள அன்புடன் அவரை எதிர்கொள்ளவேண்டும். தன்னை மிகவும் விரும்பும் ஒருவரிடம் எந்த ஒரு பெண்ணும் தன் எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்துவாள்.
நீங்கள் அன்புடன் எதிர்கொண்டால் தன்னை புரிந்துகொள்ள அனுமதி அளிப்பாள். நீங்கள் அன்புடன் அவர்களை எதிர்கொண்டாலும் உடனே தன்னை வெளிப்படுத்த தயங்குவார்கள். தன்னை அன்புடனும் அக்கறையுடனும் கையாளும் ஒருவரிடம் மெல்ல அவர்களின் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவார்கள்.
பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கு அவருடன் நன்கு பேசத் தொடங்க வேண்டும். இது தான் பெண்ணை புரிந்து கொள்வதற்கான முதல் படியாகும். நீங்கள் அவர்களிடம் வெளிப்படையாக பேச ஆரம்பித்தால் தான் அவர்களை சரியாக மதிப்பிட முடியும்.
இவ்வாறு அவர்களை பேச விட்டு உங்களின் சரியான கேள்விகள் மூலம் அவர்களை புரிந்துகொள்ளுங்கள். அவர்களை வெளிப்படையுடனும் நேர்மையுடனும் அணுக வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபாடு இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு சிலர் வெளிப்படையாகவும் ஒரு சிலர் நாணத்துடனும் இருப்பார்கள்.
அவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் எளிதாக அவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். சில பெண்கள் ஒரு சில நேரம் சரியாக பழகாமல் போவதற்கும் வெளிப்படையாக பகிராமல் இருப்பதற்கும் சில காரணங்கள் இருக்கும்.
அதனால், அவர்களை புரிந்துகொள்ள அவர்களின் கடந்தகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த கடந்தகால நிகழ்வுகள் தெரிந்தால் தான் அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பதை அறிந்து அவள் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர உதவ முடியும். அவர்களோடு நீண்ட நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் அவர்களை பற்றி புரிந்துகொள்ள முடியும்

0 comments:

Post a Comment