வம்பை விலை கொடுத்து வாங்குவதில் சமந்தாவுக்கு ஓர் ஆர்வம். இணையத்தில் அவர் எழுதுகிற கமெண்ட் ஒவ்வொன்றுக்கும் அடி விழுகிறது.
மகேஷ்பாபுவின் படப்போஸ்டரில் அவருக்குப் பின்னால் நாயகி தவழ்ந்து வருவது போல் புகைப்படம் வெளியிட்டிருந்தனர். ஹீரோயினை ஹீரோவின் பின்னால் வரும் நாய் போல் காட்டுவதா, regressive என்று சமந்தா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் நடந்த போது மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இணையத்தில் சமந்தாவை பிரித்து மேய்ந்தனர். அத்துடன் அஞ்சான் படத்தில், படுத்திருக்கும் சமந்தாவின் காலை சூர்யா தொட்டுக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் regressive என்று சாடியிருந்தனர்.
சமந்தா மட்டும் விடுவாரா. மகேஷ்பாபுவின் புதிய படத்தின் ட்ரெய்லர் வேறறொரு படத்தை அப்படியே காப்பியடித்திருப்பதாக பெயர் குறிப்பிடாமல் வாரிவிட்டார். பதிலுக்கு சமந்தாவின் அஞ்சான் பிகினி போட்டோவை போட்டு மகேஷ்பாபுவின் ரசிகர்கள் கமெண்ட எழுதி வருகின்றனர்.
இவர்களின் இணைய அக்கப்போர் இப்போதைக்கு முடியும் என்று தோன்றவில்லை.
0 comments:
Post a Comment