Friday, 29 August 2014

திருமணமான பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்

திருமணமான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு அதனை செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டியதாக பக்கத்து வீட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் சந்திரா லே–அவுட் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது கணவருடன் வசித்து வருபவர் சீதா(வயது 24 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சீனிவாஸ் என்ற கருப்பு சீனா(23). சீனிவாஸ் படிப்பை முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சீதாவுக்கும், சீனிவாசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இதனை சீனிவாஸ் ரகசியமாக தனது செல்போனில் படம் பிடித்து கொண்டார். இந்த நிலையில் தன்னிடம் இருந்த செல்போன் வீடியோ காட்சிகளை காட்டி பணம் தரவில்லை என்றால் இதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக சீதாவை சீனிவாஸ் மிரட்டியுள்ளார்.
இதனால் சீதா அதிர்ச்சி அடைந்து, சீனிவாஸ் கேட்ட பணத்தை அவ்வப்போது கொடுத்து வந்தார். தொடர்ந்து சீனிவாஸ் பணம் கேட்டு மிரட்டவே சந்திரா லே–அவுட் காவல் நிலையத்தில் சீதா புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சீனிவாசை கைது செய்தனர். மேலும் சீனிவாசிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment