அமிதாப்பச்சனின் மனைவியாக நடிக்கும் கமல் மனைவி சரிகா
கமலின் முன்னாள் மனைவி சரிகா அமிதாப்பச்சனின் மனைவியாக நடிக்கிறார். இது சினிமாவில் அல்ல, தொலைக்காட்சி தொடரில்.
அனுராக் காஷ்யப் யுத் என்ற தொலைக்காட்சி தொடரை தயாரித்து இயக்குகிறார். இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் அமிதாப்பச்சன். இந்தத் தொடர் அவரை மையப்படுத்தியே நகர்கிறது.
அமிதாப்பச்சனின் மனைவியாக யுத் தொடரில் நடிக்க தீப்தி நாவல், நஃபிஸா அலி போன்ற பலர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சரிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நான்கு வருடங்களுக்கு முன் சூஜித் சிர்காரின் படத்தில் அமிதாப்பச்சனும், சரிகாவும் கணவன், மனைவியாக நடிக்க வேண்டியது. கடைசி நேரத்தில் அந்தப் படம் ட்ராப்பானது. இப்போது சூஜித்தின் விருப்பம் நிறைவேறியுள்ளது. யுத் தொடரின் கிரியேடிவ் சூப்பர்வைசராக சூஜித் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
யாஷ் சோப்ராவின் திரிசூல் படத்தில் வரும் வகிதா ரஹ்மானின் கதாபாத்திரத்தின் பாதிப்பில் சரிகாவின் கதாபாத்திரம் இந்தத் தொடரில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment