வார வாரம் ஆரவாரமாக எதையவாது செய்தியை பரப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பது குமுதம் பத்திரிக்கையின் வாடிக்கையாகிவிட்டது. நேற்று வெளியாகியிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரின் கவர் ஸ்டோரிதான் இந்த கிடுகிடுப்புக்கு காரணம். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, அரசியல் வட்டாரமே ஆடிப்போய் உள்ளது.நம்பர் நடிகைக்கும் அரசியல் வாரிசான ஒகேஒகே நடிகரும் இடையே காதல் பற்றிவிட்டது. ஆனால் வழக்கம் போலவே தன்னை காதலிப்பவர்களையெல்லாம் ‘சேது’வாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் வழக்கமுள்ள நம்பர், இந்த முறையும் அப்படியே செய்ய காதல் வலி தாங்க முடியாமல் உறக்க மாத்திரைகளை முழுங்கிவிட்டு உலகத்தை விட்டே பறக்க நினைத்திருக்கிறார் நிதியின் வாரிசு. நல்லவேளையாக அவருக்கு நெருக்கமான சினிமா ஹீரோ ஒருவர் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டார். இப்படி போகிறது அந்த கட்டுரை.
மருத்துவமனையில் மருத்துவர்களின் ரிப்போர்ட் கைக்கு வந்து, அதை நன்றாக உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் இந்த நியூஸ் எழுதப்பட்டதாக கூறுப்படுகின்றது. குமுதம் பத்திரிக்கையை பற்றி ஏற்கனவே சில கருத்துக்கள் மக்கள் மனதில் உள்ளது. அடுத்த சூப்பர் ஸ்டார் நாடகத்தை நடத்தி பத்திரிகைக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டனர் பத்திரிக்கையாளர்கள். இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை நம்முடைய குழு ஆராய்ந்து கொண்டு இருக்கின்றது. இன்னும் சில தினங்களில் இதைப்பற்றி அறிவிப்பை வெளியிடுவோம்.
0 comments:
Post a Comment