தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா. அழகும், நடிப்பு திறமையும் கொண்ட இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
இவர் தற்போது விஜய் ஜோடியாக ‘கத்தி’, விக்ரம் ஜோடியாக ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன.
இந்நிலையில், சமந்தா, தனக்கு படங்கள் ஏதும் கிடைக்காமல் போகும் காலகட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவதைவிட, பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தடாலடியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, சில காலமாகவே நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு எதிலாவது கவனத்தை செலுத்திவேண்டும் என யோசித்து வருகிறேன். ஆனால் எந்த முடிவிற்கும் வரமுடியவில்லை. நான் இப்போதே சினிமாவை விட்டு விலகுவதை எனது நண்பர்களே விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment