Tuesday, 9 September 2014

அஜித் ரசிகர்களுக்கு மெகா சஸ்பென்ஸ் வைத்துள்ள கெளதம் மேனன்..!

அஜீத்தை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் தொடங்கப்பட்டது முதல் அப்படத்தைப் பற்றிய தகவல்களை படு ரகசியமாக வைத்துள்ளனர். அதுமட்டுமல்ல, அப்படத்தின் புகைப்படங்களும் மீடியாக்களில் வெளியாகாதபடி கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி கௌதம் மேனனை அதிர்ச்சியடைய வைத்தன. தற்போது அஜீத் நடிக்கும் 55 படத்தைப் பற்றிய தகவல்களும் கசிய அரம்பித்துள்ளன….
  1. இப்படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார். அதே நேரம் படம் ஆரம்பித்து 45 நிமிடங்கள் வரை அஜித் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியாதாம். இப்படத்தில் அஜீத் 28 வயதிலிருந்து 35 வயது வரைக்குமான நான்கு கெட்அப்களில் வருகிறாராம். ஒவ்வொன்றிற்கும் சின்ன சின்ன வித்தியாசமான மேக்அப்களை பயன்படுத்தியிருக்கிறார்களாம்.
  2. சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைசெய்யும் 28 வயது மாடர்ன் பெண்ணாக அனுஷ்கா இப்படத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியாக நடிக்கும் த்ரிஷா இப்படத்தில் யாரைக் காதலிருக்கிறார் என்பது படத்தில் சஸ்பென்ஸாக இருக்குமாம்.
  3. மங்காத்தாவின் பைக் சேஸ், பில்லா 2 படத்தில் ஹெலிகாப்டர் சாகஸம், வீரம் படத்தின் ரயில் சண்டையைத் தொடர்ந்து இந்த படத்தில் 120 அடி உயர கட்டிடத்திலிருந்து கீழே இறங்கி வருவது போன்ற ஒரு காட்சியில் அஜித் டூப்பே போடாமல் நடித்து யூனிட்டை பிரமிக்க வைத்திருக்கிறாராம். (பார்றா)
  4. வட இந்தியாவின் ராணுவத்தளங்களின் சில இடங்களில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம். விரைவில் இந்த இடங்களில் படப்பிடிப்பு துவங்குமாம்.
  5. கௌதமுடன் மீண்டும் இணைந்திருக்கும் ஹாரிஸ் இப்படத்திற்காக 6 சூப்பரான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.
  6. ஜேம்ஸ்பான்ட் படங்களைப் போல, இப்படத்தில் அஜீத் செய்திருக்கும் கேரக்டரை மையமாக வைத்தே தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் கௌதம் மேனன். அந்த எல்லா படங்களிலும் அஜித்தே நாயகனாகத் தொடர்வாராம்.
  7. இப்படத்தின் டைட்டிலை தீபாவளி வரை ரகசியமாகவே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

0 comments:

Post a Comment