தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சினேகா-பிரசன்னா தம்பதியினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். காதலித்தாலும் பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி சூர்யா-ஜோதிகா தம்பதி போல் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகின்றனர்.
திருமணமானாலும் நடு நடுவே சில நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் சினேகா நடித்து வந்தார். பிரசன்னாவும் கடைசியாக கல்யாண சமையல் சாதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென இந்த காதல் ஜோடி திருப்பதிக்கு வந்தனர். அங்கு பயபக்தியுடன் ஏழுமலையானை அவர்கள் தரிசனம் செய்தனர்.
தங்கள் பட வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்று வேண்டி இவர்கள் சாமி தரிசனம் செய்திருக்கலாம் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment