கத்தி படத்தை தொடர்ந்து விஜய் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா இருவரும் நடிக்க உள்ளனர். மேலும், ‘நான் ஈ’ சுதீப் மற்றும் நடிகை ஸ்ரீதேவி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
இது விஜய்யின் 58-வது படமாகும். இப்படத்திற்கு பட்ஜெட் ரூ.80 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காடு, மலைகளில் எடுக்கவிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை நட்டி நடராஜ் கவனிக்கவிருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ‘நான் ஈ’, ‘மாவீரன்’ ஆகிய படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட குழு இப்படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.
எனவே இப்படத்தை மிகவும் பிரமாண்டன முறையில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன்.
0 comments:
Post a Comment