சென்னை:
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தயாராகி வரும் படம் ஐ. ஷங்கரின்
இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படத்தின்
நாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
தீபாவளிக்கு ரிலீசாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதில், ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் அர்னால்டு, நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கரின் படம் குறித்த எதிர்பார்ப்பு எப்போதுமே ரசிகர்களிடம் அதிகமாக இருக்கும். அந்தவகையில், ஐ படத்தின் கதை என்ன என்பதை அறிய ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ள நிலையில், ‘இது தான் ஐ படத்தின் கதை' என இணையத்தில் ஒரு "கதை" உலா வந்து கொண்டிருக்கிறது. இதுதான் இணையத்தில் உலவும் கதை, அது உங்கள் பார்வைக்கு...
விக்ரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயியாம். ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகியாம். எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றதாம். ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லையாம்.
இந்நிலையில் எமி ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை.
இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார். தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.
இந்நிலையின் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடிக்கின்றார். அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார்.
ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திரத் தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய முயற்சிக்கிறார்.
அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை என வில்லன் யோசித்துக் கொண்டிருக்கையில், உபேனை சந்திக்கின்றார் விக்ரம். அவரது உடம்பிலும் அந்த மருந்து ஏற்றப்படுகிறது.
ஆனால், அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மாறுகின்றார் விக்ரம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார் விக்ரம்.
எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரை கடத்துகின்றார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார்.
விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாற, இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூரவிலங்குகளாக மோதுகின்றனர். பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது தான் படத்தின் முடிவு என இப்படியாக அந்தக் கதைச் சொல்லப்பட்டுள்ளது.
முன்னதாக விக்ரம் ஒரு விளையாட்டு வீரர் என ஒரு கதை இணையத்தில் உலாவியது நினைவிருக்கலாம். ஆனால், சமீபத்தில் வெளியான போஸ்டர் மற்றும் டீசரில் ஓநாய் உருவத்துடன் விக்ரம் வருவதால் இந்தக் கதை "நம்பும்" விதமாக அமைந்துள்ளது.
உண்மையில் இது தான் படத்தின் உண்மைக் கதையா அல்லது கிடைத்த ட்ரைலர் மற்றும் போட்டோக்களை வைத்து ரசிக சிகாமணிகள் உருவாக்கியதா எனத் தெரியவில்லை. படம் மட்டுமே இதற்கு விடை சொல்லும். ஷங்கர் ரூம் போட்டு கஷ்டபட்டு உருவாக்கி, பொத்திப் பொத்திப் பாதுகாத்த கதையை அதற்குள்ள கண்டுபிடித்து அம்பலத்திற்குக் கொண்டு வந்து விட்டார்களே....!

0 comments:
Post a Comment