விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசு, பிரபல நடிகைகளும் பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும் என்று கூறினார். அவரது பேச்சு திரையுலகினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வேதா பாசு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தவர். 2002 இல் இவர் நடித்த மக்தே படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் ராரா, சந்தமாமா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஸ்வேதா பாசுக்கு படங்கள் இல்லாமல் போனது. வருமானம் தடைபட்டது. பணத்துக்காக வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அவருக்கு புரோக்கராக செயல்பட்டது, சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பாலு என்பவர்.
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஸ்வேதா பாசு தொழில் அதிபர் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலுவையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்வேதா பாசு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பணக்கஷ்டம் காரணமாகவே விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கண்ணீருடன் பேட்டியளித்த ஸ்வேதா பாசு, பிரபல நடிகைகள் பலரும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, அந்த நடிகைகள் யார் என்பதை அறிய காவல்துறையினர் ஸ்வேதா பாசுவிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக முன்னணி நடிகைகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது
0 comments:
Post a Comment