Tuesday, 9 September 2014

விபசார வேட்டையில் இன்னொரு நடிகை கைது

ஆந்திராவில் விபசார வழக்கில் நடிகைகள் தொடர்ச்சியாக கைதாகி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை ஸ்வேதா பாசு விபசார வேட்டையில் கைதானது தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வேதாபாசு தமிழில் ராரா, சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபகாலமாக ஸ்வேதா பாசுக்கு படங்கள் இல்லை. பண நெருக்கடியால் கஷ்டப்பட்டார் . உதவி இயக்குனர் ஒருவர் இதைபயன்படுத்தி ஸ்வேதா பாசுவை விபசாரத்தில் தள்ளி தொழில் அதிபருடன் படுக்கை அறையில் இருந்த ஸ்வேதா பாசுவை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது பெண்கள் மறு வாழ்வு இல்லத்தில் அவர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தெலுங்கு நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். திவ்யஸ்ரீ தெலுங்கில் பிடெக் பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக அந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அங்கு விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திவ்யாஸ்ரீயை கைது செய்தனர். இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரும் போலீசாரிடம் சிக்கினர்.

0 comments:

Post a Comment