மதுரையில் இருந்து சென்னை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வடமாநில இளம்ஜோடிகள் சில்மிஷம் செய்ததால் பாதிவழியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் சென்னை செல்வதற்காக ரயிலில் உள்ள மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஏறியுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் அரியலூர் ரயில் நிலையம் அருகே செல்லும் போது பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில், பி.1 பெட்டியில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 ஜோடிகள் இருக்கையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்தியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அரியலூர் ரயில் நிலையத்தில் வடஇந்திய இளம்ஜோடிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் 5 பேரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் ரயிலில் தாங்கள் சில்மிஷம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்தபோது சக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஏறினால் ரயிலை புறப்படவிட மாட்டோம் என பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த 5 பேரும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
பின்னர், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 20 நிமிட தாமதத்திற்கு பிறகு சென்னை புறப்பட்டு சென்றுள்ளது
0 comments:
Post a Comment