கத்தி படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும்
விதமாக உள்ளது என நீண்ட நாட்களாகவே ஒரு கருத்து நிலவி வந்தது. 90
பிணைக்கைதிகளை பிடித்து வைத்து கொண்டு மிரட்டும் தீவிரவாதிகள் பற்றிய கதை
என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இது எந்த அளவிற்கு உண்மை என்று நமது
நியூஸ்டிக் நிருபர் மறைமுகமாக துளாவியதில் கத்தி படத்தின் முழுக்கதை நமக்கு
வந்து சேர்ந்தது.
முதலில் கத்தி படத்தின் கதையை பார்ப்போம்:-
விஜய் என்ஜினியரிங் முடித்துவிட்டு
சாதிக்க நினைக்கு ஒரு துடிப்பான சென்னை இளைஞர். தன்னுடைய திறமையை கொண்டு
வெளிநாடுகளுக்கு நிகராக சென்னை சிட்டியை மாற்றியமைக்க வேண்டும் என
நினைக்கின்றார். இதற்காக துபாயில் உள்ள பால்ம் தீவை காணச் செல்கின்றார்.
இவரை போன்றே ஹீரோயின் சமந்தாவும் மெரீனா கடற்கரையை மாற்றியமைக்க வேண்டும்
என துபாய்க்கு செல்கின்றார். இருவருக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.
தற்செயலாக இருவரும் ஒரே ஓட்டலில் தங்க நேரிடுகிறது.
சென்னையை மாற்றியமைக்க தேவையான அனைத்து
விசயங்களையும் அந்த தீவில் இருந்து கொண்டே சேகரிக்கின்றார் விஜய். தான்
சேகரித்த அனைத்து விசயத்தையும் ஒரு பென்ட்ரைவில் சேமித்து
வைத்திருக்கிறார். அந்த பென்ட்ரைவ் எப்பொழுதும் விஜய் கழுத்திலேயே
இருக்கும். ஒருநாள் குளிக்கும்போது பாத்ரூம் துவாரத்தில் பென்ட்ரைவ் நழுவி
விழுகின்றது. தண்ணியில் அடித்து செல்லப்பட்ட அந்த பென்ட்ரைவ் சமந்தாவின்
குளியலறையில் விழுகின்றது. அதை எடுத்து தன்னுடைய கணினியில் சொருகிப்பார்த்த
சமந்தாவிற்கு ஒரே இன்ப அதிர்ச்சி. தான் நினைத்தது போன்றே ஒரு ப்ராஜெட்
அந்த பென்ட்ரைவ் இருப்பதால், அதை யாரிடமும் சொல்லாமல் அபேஸ் செய்து கொண்டு
சென்னை திரும்புகின்றார். விஜய் தான் போட்ட அனைத்து ப்ளான்களும்
சொதப்பலானதால் விரக்தியுடன் சென்னை திரும்புகின்றார்.
சமந்தாவின் அண்ணன் பெரிய கன்ஸ்ட்ரக்சன்
முதலாளி. இருவரும் தமிழக அரசிடம் ப்ரஜெக்ட்யை சமர்ப்பித்து சென்னையை
மாற்றும் பொறுப்பை ஏற்கின்றனர். வேலைகள் படு மும்முரமாக நடந்துவருகின்றது.
ஆனால் அதில் இறுதிவடிவம் சரியாக குறிப்பிடப்படவில்லை. எனவே அங்குள்ள ஒரு
நல்ல இன்ஜினியர் உதவியை நாடுவது என முடிவு செய்கின்றார் சமந்தா. அப்பொழுது
எல்லோரும் விஜய்யை கை காட்ட விஜய்யிடம் உதவி கேட்டு நிற்கின்றார் சமந்தா.
அந்த பிராஜெக்ட்யை வாங்கி பார்த்த விஜய், தன்னுடைய ப்ரஜெக்ட் தான் இது எனத்
தெரிந்தவுடன் மயங்கி விழுகின்றார். இந்த இடத்தில் படத்தின் இன்டெர்வல்
வருகின்றது.
மயங்கிய விஜய்க்கு ‘சார்ட் டைம் மெமரி
லாஸ்’ போன்று ஒரு புது வியாதி உருவாகின்றது. அதாவது அவர் டிசைன் செய்த
மடல்கள் அனைத்து அவருக்கு ஞாபகம் உள்ளது. ஆனால் துபாய் சென்றது பென்ட்ரைவ்
தொலைந்தது எதுவும் ஞாபகம் இல்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் சமந்தாவிற்கு
உதவுகின்றார். விஜய்யின் உதவியுடன் வேலைகள் நடந்து வருகின்றது. அதே சமயம்
இருவரும் நட்பாகின்றனர், பின்பு காதலாக மாறுகின்றது. அந்தசமயத்தில்
விஜய்க்கு மீண்டும் தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் திரும்புகின்றது.
சமந்தாவின் ப்ரஜெக்ட் தன்னுடையது என
நிருபிக்கும் வேலையில் முற்படுகின்றார் விஜய். ஆனால் ப்ராஜெக்ட் பாதியிலேயே
நின்று போனால் பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்பதற்காக, சமந்தாவின்
அண்ணன் வில்லனாக மாறுகின்றார். விஜய்யை ஆள்வைத்து அடித்து துரத்திவிட்டு
ப்ரஜெக்ட்யை முடிக்கின்றார்.
சில நாட்கள் கழித்து ஒரு பெரிய சுனாமி
ஏற்படுகின்றது. அதில் சென்னை நகரம் சீர்குலைந்து போகின்றது. அந்த சமயத்தில்
விஜய் பழைய சென்னையை மீண்டும் உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றார்.
அவருக்கும் ஏற்கனவே உருவாக்கிய அனைத்து வித வடிவமைப்பும் அப்படியே நினைவில்
உள்ளது. அதே போன்றே மீண்டும் உருவாக்கிகாட்டுகின்றார். அவரின் திறமையை
பார்த்து வியந்துபோன மக்கள், விஜய்க்கு கத்தி போன்று ஷார்ப் மைண்ட் என
கத்தி சொல்கின்றனர். அன்று முதல் விஜய்யை கத்தி என அழைக்க துவங்குகின்றனர்.
அவருக்கு ஒரு சிலையையும் வைக்கின்றனர்.
விஜய் கையில் கத்தியை பிடித்தது போன்று அந்த சிலை உள்ளது. இப்படி மக்களின்
அன்பை சம்பாதிக்கின்றார் விஜய். இந்த கதையில் இன்னொரு மிகப்பெரிய வில்லன்
ஒருவர் இருக்கின்றார். அந்த வில்லனை அந்த சிலையின் கத்தியால்
கொலைசெய்கின்றார் விஜய். இது தான் கத்தி படத்தின் க்ளைமேக்ஸ். எதற்கு அந்த
வில்லன் விஜய்யை பழிவாங்க துடிக்கின்றான். விஜய்க்கு, வில்லனுக்கும் என்ன
சமந்தம், சமந்தா விஜய்யுடன் சேர்ந்தாரா?, இதில் இரண்டு விஜய் உள்ளனரா?
என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். எல்லாத்தையும் சொல்லிட்டா
படம் பாக்கும்போது சுவாரஸ்யம் இருக்காதுல……..
இது தான் கத்தி படத்தின் முழுக்கதை. இந்த
படத்தில் விஜய் செல்லும் துபாய் நாடு மட்டுமே இஸ்லாமியர்கள் அதிகம்
வசிக்கும் ஒரு நாடு. மற்ற படி வேறு எந்த காட்சிகளும் இஸ்லாமியர்களை இழிவு
படுத்தி எடுக்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமான தகவல் வந்துள்ளது. எனவே
கத்தி படத்தை இஸ்லாமியர்களும் கண்டிப்பாக ரசிப்பார்கள் என இயக்குனரே
தெரிவித்துள்ளார்….
0 comments:
Post a Comment