Thursday, 11 September 2014

விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட முருகதாஸ்; இருவரையும் சேர்த்துவைத்த அஜித்..!

சில தினங்களுக்கு முன் கத்தி படப்பிடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். காரணத்தை விசாரித்த போது, லைக்காவின் மேல் உள்ள ஆத்திரத்தையெல்லாம் முருகதாஸ் மீது காட்டியுள்ளார் விஜய். இதனால் மனவேதனையடைந்த முருகதாஸ் அன்று முழுவதும், எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் மயக்கமடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை சரியாகியது.
முருகதாஸ் மருத்துவமனையில் இருந்தபோது, அஜித், சூர்யா ஆகியோர் தனித்தனியாக சந்தித்து உடல் நலத்தை விசாரித்துள்ளனர். அப்போது, அஜித் முருகதாசிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகின்றது. அதன் பின்னர், தன்னை காணவந்த விஜய்யிடம், முருகதாஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். லைக்கா பற்றி எனக்கு முன்கூட்டியே தெரியாது என்று விஜய்யிடம் முருகதாஸ் கூறியுள்ளார். பதிலுக்கு விஜய், முருகதாசிடம் மன்னிப்புகேட்டுள்ளார். பின்னர் இருவரும் ராசியாகியுள்ளனர்.
மேலும், நேற்று வீடு திரும்பிய முருகதாஸ், வந்த வேகத்தில் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும், கூடவே இருந்த நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார். முக்கியாமாக, நான் பூரணமாக குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்த கோவை விஜய் ரசிகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

0 comments:

Post a Comment