Thursday, 11 September 2014

திருமண விரைவாய் நடக்க பூஜை நடத்திய அனுஷ்கா

அனுஷ்கா தற்போது ருத்ரமாதேவி என்ற தெலுங்கு சரித்திர படத்தில் நடித்து வருகிறார். 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்திற்காக 100 நாள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். அதோடு வாள் சண்டை, கத்திச் சண்டை குதிரையேற்றம் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் ராணி ருத்ரமாதேவியாக நடிப்பதால் ஒரிஜினில் தங்க நகை அணிந்து நடித்து வருகிறார். இதற்காக எப்போதும் 3 கிலோ தங்க நகைகள் தயாராக இருக்கும். அதை பாதுகாக்க தனி பாதுகாவலர்களும் உண்டு. அப்படி இருந்தும் கடந்த மாதம் அந்த நகைளில் ஒரு பகுதி சுமார் ஒரு கிலோ திருட்டு போய்விட்டது.
இதனால் அனுஷ்கா கலக்கம் அடைந்தார். அவருக்கு நெருக்கமானவர்கள் சரித்திரப் படத்தில் நடிக்கும்போது விபத்துக்களோ அல்லது இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களோ நடக்கும். அப்போது அதற்கு பரிகாரம் செய்து விடவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் தனது குடும்ப ஜோதிடரை கலந்து பேசிய அனுஷ்கா ஒரு வாரம் விரதம் இருந்து ஆந்திராவில் உள்ள ருத்ரமாதேவி கோவிலில் கடந்த வாரம் பரிகாரபூஜை செய்தார். பூஜைக்கு பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஆனால் அனுஷ்காவுக்கு மூன்று முறை திருமண பேச்சுவார்த்தை நடந்து முறிந்து விட்டதாகவும், சமீபத்தில் ஒரு திருமணம் சம்பந்தம் நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று விட்டதாகவும் அதனால் திருமண பரிகார பூஜை நடத்தினார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

Post a Comment