Sunday, 7 September 2014

நயன்தாரா அடித்ததால் என் கன்னத்தில் காயம் –உதயநிதி

பரபரப்புக்கு பெயர் போன நடிகை நயன்தாரா உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘‘நண்பேன்டா’’ படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்ததாக உதயநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி உதயநிதி ஸ்டாலினிடம் கேட்ட போது கூறியதாவது:–
‘‘நண்பேன்டா’’ படத்தில் நானும், நயன்தாராவும் உருண்டு வருவது போல் காட்சி படமாக்கப்பட்டது. இதன்பின் வில்லன் கன்னத்தில் அவர் அடிக்க வேண்டும்.
இந்த காட்சி படமாக்கப்பட்டது. வில்லன் கன்னத்தில் அடிப்பதற்கு பதில் தவறுதலாக எனது கன்னத்தில் அடித்து விட்டார். இதில் அவரது விரல் நகம் எனது கண் இமையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். படப்பிடிப்பில் தெரியாமல் நடந்த விபத்து இது.
ஆனால் எனக்கும் நயன்தாராவுக்கும் மோதல் என தவறுதலாக செய்தி பரவி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment