Monday, 13 October 2014

vijay chief minister candidate

ரஜினி தேவையில்லை. விஜய் தான் முதல்வர் வேட்பாளர். பாஜகவின் அதிரடி திருப்பம்.


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பாரதிய ஜனதா மேலிடம் தீவிர முயற்சி செய்து வருகிறது.

இதை மனதில் வைத்துதான் ரஜினிக்கு தூதுமேல் தூது அனுப்பி அவரை எப்படியாவது பாஜகவில் இணைத்துவிட பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் இதுவரை ரஜினி பிடிகொடுக்காமல் பேசி வருகிறார். மேலும் அவருடைய லிங்கா திரைப்படம் வெளிவரும் வரை அவர் அரசியலுக்கு வருவது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்திவிட்டு பின்னர் அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டு அடுத்த படத்திற்கு சென்றுவிடுவார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர். எனவே தற்போது பாஜகவின் பார்வை விஜய் மீது திரும்பியுள்ளது.

இரண்டு திராவிட கட்சிகளாலும் பாதிக்கப்பட்டவர், கோடிக்கணக்கான ரசிகர்களை தனது அன்பால் கட்டிப்போட்டவர், குறிப்பாக இளைஞர்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்றவர் என்பதால் தற்போது பாரதிய ஜனதா தலைவர்களின் பார்வை விஜய் மீது திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கும் எதிர்காலத்தில் அரசியலில் குதிக்க ஆசையிருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று அறிவிக்க பாஜக தயார் என்றால் அரசியலில் குதிக்க விஜய் தயார் என்று அவருடைய வட்டாரங்கள் கூறுகின்றன. கத்தி திரைப்படம் ரிலீசானவுடன் விஜய் டெல்லி சென்று இதுகுறித்து பாஜக மேலிடத்தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment