யார் முட்டாள் என்பதை ராம்கோபால் வர்மாவுக்கு புரிய வைப்போம். அஜீத் ரசிகர்கள் ஆத்திரம்
பிரபல
தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா நேற்று தனது டுவிட்டரில் ஷங்கரின்
பிரமாண்ட படத்திற்கு போட்டியாக படத்தை வெளியிடுபவர்கள் முட்டாள்களாகத்தான்
இருப்பார்கள் இருப்பார்கள் என்று கூறியுள்ளதை அடுத்து அவருக்கு பதிலடி
கொடுக்கும் விதமாக அதே டுவிட்டரில் அஜீத் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவுக்கு
கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அஜீத்தின்
மாஸுக்கு முன்னால் ஷங்கரின் பிரமாண்டம் தவிடுபொடி ஆகப்போவதை ராம்கோபால்
இன்னும் சில நாட்களில் பார்க்கத்தானே போகிறார் என்றும் அஜீத்தின் உண்மையான
பவர் என்ன என்பதை வரும் பொங்கல் தினத்தில் ராம்கோபால் வர்மா புரிந்து
கொள்வார் என்றும் ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர்.
ஷங்கரின்
'ஐ' படத்தின் ஒருவார கலெக்ஷனை 'என்னை அறிந்தால்' மூன்றே நாட்களில்
வசூலித்துவிடும் என்றும் அப்போது முட்டாள் யார் என்பது ராம்கோபால்
வர்மாவுக்கு புரியவரும் என்றும் அஜீத் ரசிகர்கள் அவருடைய டுவிட்டர்
பக்கத்திலேயே ரீடுவிட் செய்துள்ளனர்.
அஜீத் ரசிகர்கள் மற்றும் ராம்கோபால் வர்மாவின் டுவிட்டர் மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment