மதுரையில் பாரத மாதாவாக குஷ்புவை சித்தரித்து, காங்கிரஸ் சார்பில் வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் போர்டை போலீசார் அகற்றியுள்ளனர்.
மதுரை உத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே
குடியரசு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு
இருந்தது. அதில், இந்திய வரைபடத்துக்குள் சிங்கம் மீது பாரத மாதா கையில்
தேசிய கொடியுடன் அமர்ந்திருப்பது போன்ற படம் இருந்தது.
ஜனவரி 26ம் தேதி வைக்கப்பட்ட இந்தப் பிளக்ஸ் போர்டை முதலில் யாரும் சரியாக கவனிக்கவில்லை.
பின்னர், நன்றாக உற்றுப் பார்த்த போது,
அதில் பாரதமாதாவாக சித்தரிக்கப் பட்டிருப்பது நடிகை குஷ்பு என தெரிய
வந்தது. இது குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட பா.ஜனதா கட்சியின்
துணைத்தலைவர் ஹரிகரன், ‘இந்த பிளக்ஸ் போர்டு மூலம் தேசிய சின்னம் மற்றும்
தேசிய கொடியை அவமதிப்பு செய்ததற்காக காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
0 comments:
Post a Comment