Friday, 20 February 2015

Thursday, 5 February 2015

Yennai Arindhaal movie review | என்னை அறிந்தால் திரைவிமர்சனம்

ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்த பக்கம் நான் நல்லவன், கோட்டுக்கு அந்த பக்கம் நான் ரொம்ப கெட்டவன். இது ‘என்னை அறிந்தால்’ படத்தின் முதல் டீஸர்.அஜீத்-கவுதம் மேனன் கூட்டணி கோட்டுக்கு எந்த பக்கம் போயிருப்பார்கள் என்பதை அடுத்து வந்த டிரைலர் தெளிவாக கூறிவிட்டது. பில்லாவுக்கு பிறகு ஏறக்குறைய அஜீத்தின் அனைத்து படங்களும் நெகட்டிவ் ஹீரோ கேரக்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.




இதுவரை இல்லாத அளவிற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கவுதம் மேனனின் முந்தைய போலீஸ் திரைப்படங்களான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இது அவரது மூன்றாவது போலீஸ் படம், அஜீத்துடன் இணையும் முதல் படம், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹாரீஸுடன் மீண்டும் கூட்டணி, மங்காத்தா வெற்றிக்கு பின்னர் த்ரிஷாவுடன் ஜோடி சேரும் அஜீத், தல படத்தில் முதல் முறையாக அனுஷ்கா, எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் அஜீத் படத்தில் மீண்டும் விவேக், ஆரண்ய காண்டம் இயக்குனரின் திரைக்கதை பங்கு, பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட ரிலீஸ் தேதி என இன்னும் பல காரணங்களால் இமயமலை அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘என்னை அறிந்தால்’ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை இப்போது பார்ப்போம்.
படத்தின் கதை சாதாரண பழிவாங்கும் போலிஸ் கதைதான். ஆனால் அதை சொன்ன விதம்தான் வித்தியாசமானது. படத்தின் ஒருசில இடங்களில் ‘வேட்டையாடு விளையாடு’ சாயல் இருந்தாலும், கவுதம் மேனனின் திரைக்கதை படத்தை மொத்தமாக தூக்கி நிறுத்துகிறது. 2வயது குழந்தையுடன் இருக்கும் த்ரிஷாவை காதலிக்கின்றார் அஜீத். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய நாள் த்ரிஷா கொல்லப்படுகிறார். கொலை செய்வது முதலில் அஜீத்தினால் பாதிக்கப்பட்ட வில்லன் அருண்விஜய். த்ரிஷாவின் குழந்தையை வளர்க்கும் அஜீத், அருண்விஜய்யை கண்டுபிடித்து கொல்வதுதான் கதை. இதற்கிடையில் அனுஷ்காவுடன் இரண்டாவது காதல். இதுதான் கதை. ஆனால் இந்த சாதாரண கதையை வித்தியாசமான திரைக்கதை, நறுக்கான வசனங்கள், பில்டப் இல்லாத அஜீத்தின் கேரக்டர், பிரம்மாதமான ஒளிப்பதிவு, அதிர வைக்கும் பின்னணி இசை என கமர்ஷியல் படமாக்க எல்லோரையும் கவுதம் மேனன் வேலை வாங்கிய விதம்தான் புதிது.
அஜீத் சத்யதேவ் கேரக்டராகவே மாறிவிட்டார் என கூறலாம். கேரக்டரின் தன்மையை முழுவதும் புரிந்து கொண்டு மிகைப்படுத்தாத நடிப்பை கொடுத்துள்ளார். ஒரு பெரிய ஹீரோவாக இருந்தும் தன்னையே கலாய்க்கும் காட்சிகளுக்கு அனுமதித்த பெருந்தன்மை வேறு ஸ்டார்களுக்கு வரும? என்பது சந்தேகம்தான். வலிய திணிக்கும் பஞ்ச் வசனங்களை தைரியமாக தவிர்த்து கதைக்கு என்ன தேவையோ அதற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். ஐ.பி.எஸ் அதிகாரியாக வரும்போது உள்ள கம்பீரம், அதன்பின்னர் ஏற்படும் காதல், த்ரிஷாவின் கொலையால் ஏற்படும் சோகம், பின்னர் ஒருசிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் ஆக்சனுக்கு திரும்பும் வேகம் என அவரிடம் இருந்து ஒரு கலவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள கவுதம் மேனனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அஜீத் நடித்த படங்களிலேயே இதில்தான் அவர் தன்னுடைய பெஸ்ட் நடிப்பை கொடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது.
அஜீத்துக்கு சரிசமமான வேடம் அருண்விஜய்க்கு. ஒரு படத்தில் எதிரி வலுவாக இருந்தால்தான் ஹீரோயிசத்துக்கு வேலை. அஜீத்துக்கு சமமாக ஒருசில இடங்களில் அஜீத்தையே தூக்கி சாப்பிடும்படியான காட்சிகள் இவற்றையெல்லாம் வேறொரு ஹீரோவாக இருந்தால் ஒப்புக்கொள்வார்களா? என்பது சந்தேகமே. அஜீத்தின் பெருந்தன்மையால் கிடைத்த இந்த வேடத்தை மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளார் அருண்விஜய். அருண்விஜய் கண்களில் தெரியும் கோபம், ஏமாற்றமடையும்போது வெளிப்படுத்தும் வெறி இதுவரை அவருடைய படங்களில் பார்த்திராத பெர்பாமன்ஸ். கண்டிப்பாக அருண்விஜய்க்கு இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். அவருக்கு ஜோடியாக வரும் பார்வதிநாயரும் பிரம்மாதமாக நடித்துள்ளார்.
கவுதம் மேனனின் படங்களில் வரும் ஹீரோயின்கள் ஹீரோவுடன் மரத்தை சுற்றி டான்ஸ் ஆடி பாடலில் மட்டும் கவர்ச்சியை காட்டிவிட்டு செல்பவர்கள் கிடையாது. அவருடைய படங்களில் வரும் ஹீரோயின்களுக்கும் அழுத்தமான கேரக்டர் படத்தில் வைத்திருப்பார். இந்த படத்தின் த்ரிஷா, அனுஷ்கா ஆகிய இரண்டு ஹீரோயின்களும் கதையில் இணைந்தே வருவதால் இருவருமே அசத்தியுள்ளனர்.விரைவில் மணப்பெண்ணாக மாறப்போகும் த்ரிஷாவுக்கு ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்திற்கு பின் கிடைத்த ஒரு அற்புதமான ரோல். த்ரிஷாவின் கண்களே பல இடங்களில் வசனம் பேசுகிறது. அஜீத்-த்ரிஷா காதல் கதை பாகம் கொஞ்சம் வேட்டையாடு விளையாடு சாயலில் உள்ளது. அந்த படத்தில் உள்ளதுபோலவே ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை காதலிப்பது, அவருக்காக ரிஸ்க் எடுப்பது என்று போகிறது கதை. கவுதம் மேனன் இதை தவிர்த்திருக்கலாம். அனுஷ்காவின் பங்கு இந்த படத்தில் குறைவுதான் என்றாலும் நிறைவாக செய்துள்ளார். அவருடைய அனுபவபூர்வமான நடிப்பு படத்தின் ப்ளஸ். பார்வதி நாயர், விவேக்,பேபி அனிகா ஆகியோர்களும் தங்கள் பணியை சரியாகவே செய்துள்ளார்கள்
ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் பற்றி கூறவேண்டியதே இல்லை. ஏற்கனவே அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் பின்னணி இசையில் அவர் காட்டியுள்ள அக்கறை வியக்க வைக்கின்றது. ஆக்ஷன் காட்சிகளில் ஹாலிவுட் தரத்தில் பின்னணி இசை. ஒரு த்ரில்லர் படத்திற்கு எப்படி இசை இருக்க வேண்டும் என்பதை மிகச்சரியாக நுணுக்கமாக அறிந்து கொடுத்துள்ளார்.
படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணம் எடிட்டர் அந்தோணி. நல்ல வேளை 3 மணி நேரத்திற்கும் மேல் இருந்த படத்தை 2.45 மணி நேரமாக குறைத்துவிட்டார்கள். இருப்பினும் ரொமாண்டிக் காட்சிகளில் அந்தோணி இன்னும் கொஞ்சம் கத்தரியை வைத்திருக்கலாம். மற்றபடி ஆக்ஷன் காட்சிகளில் செம விறுவிறுப்பு. கடைசி அரைமணி நேரம் சான்ஸே இல்லை. அபாரம்
ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் டான் மெக்ரதேவின் கேமரா புகுந்து விளையாடியுள்ளது. மிகச்சரியான ஆங்கிள்களில் அபாரமான ரிசல்ட்டை கொடுத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கேமரா வித்தை செய்துள்ளது என்பதை உறுதியாக கூறலாம்.
பட ரிலீஸுக்கு முன்னர் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கொடுத்த பேட்டியை பார்த்தபோது, கொஞ்சம் ஓவராகத்தான் பில்டப் செய்கிறாறோ என்று எண்ணத்தோன்றியது. ஆனால் அவர் கூறியது அத்தனையும் உண்மை என்பது படம் பார்த்தவர்கள் புரிந்து கொள்வார்கள். அஜீத்-அருண்விஜய் மோதும் காட்சியில் உள்ள த்ரில்லை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அஜீத்தை பயங்கரமாக வேலைவாங்கியுள்ளார் என்பது தெரிகிறது.
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தோல்விக்கு பின்னர் தன்னுடைய திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாய நிலையில் இருந்த கவுதம் மேனனுக்கு மிகச்சரியான களம் கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டம்தான். அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, ஏ.எம்.ரத்னம், ஹாரீஸ் ஜெயராஜ், என அனைவரின் உதவியுடன் தான் அவர் வெற்றி பெற்றார் எனினும் எல்லோரிடமும் அவருக்கு என்ன தேவையோ அதை சரியான அளவில் வாங்கி ஒன்று சேர்த்த கவுதம் மேனனை பாராட்டாமல் இருக்க முடியாது. சத்யதேவ் கேரக்டரை மனதில் நிறுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சியை இதைவிட மிகச்சிறப்பாக வேறு இயக்குனர் செய்வாரா என்பது சந்தேகம்தான்.
அஜீத்தின் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை திருப்திபடுத்துவது என்பது சாதாரண விஷயமில்லை. கவுதம் மேனனின் ஸ்ட்ராங்கான திரைக்கதை அதை செய்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். அழுத்தமான திரைக்கதை, நறுக்கான வசனங்கள், இரண்டாவது பாதியில் சீட் நுனிக்கு வரவழைக்கும் த்ரில், மிகப்பொருத்தமான க்ளைமாக்ஸ் என அசத்திவிட்டார் கவுதம். ஸ்டைலிஷான இயக்குனர் என பெயரெடுத்த கவுதம் மேனன், அதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
மொத்தத்தில் அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி ‘என்னை அறிந்தால்’ ஒரு சிறந்த எண்டர்டெய்னர் என்பதில் சந்தேகம் இல்லை.
என்னை அறிந்தால் ரேட்டிங்: 4/5

Tuesday, 3 February 2015

பாரதமாதாவாக மாறிய குஷ்பு.. பொங்கி எழுந்த பா.ஜ.,



மதுரையில் பாரத மாதாவாக குஷ்புவை சித்தரித்து, காங்கிரஸ் சார்பில் வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் போர்டை போலீசார் அகற்றியுள்ளனர்.
மதுரை உத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே குடியரசு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. அதில், இந்திய வரைபடத்துக்குள் சிங்கம் மீது பாரத மாதா கையில் தேசிய கொடியுடன் அமர்ந்திருப்பது போன்ற படம் இருந்தது.
ஜனவரி 26ம் தேதி வைக்கப்பட்ட இந்தப் பிளக்ஸ் போர்டை முதலில் யாரும் சரியாக கவனிக்கவில்லை.
பின்னர், நன்றாக உற்றுப் பார்த்த போது, அதில் பாரதமாதாவாக சித்தரிக்கப் பட்டிருப்பது நடிகை குஷ்பு என தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவர் ஹரிகரன், ‘இந்த பிளக்ஸ் போர்டு மூலம் தேசிய சின்னம் மற்றும் தேசிய கொடியை அவமதிப்பு செய்ததற்காக காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

Monday, 2 February 2015

is broiler chicken good for health

பிராய்லர் கோழி சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா?  

பொதுவாக நம் நாட்டில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகளுக்கு, இயற்கை உணவுகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதனால் நாட்டு கோழிகளில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதன் மூலம் நமக்கு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.



ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவர் என்பது அதிர்ச்சி கலந்த உண்மை.

இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான். ஆறு மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய பிராய்லர் கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மற்றும் ஊசிகள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.

இவ்வாறு ரசாயணங்கள் மற்றும் ஊசிகள் மூலம் முழு வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவில் உள்ளது. எனவே நாம் பிராய்லர் கோழிகளை உட்கொள்ளும் போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துகள் அதிக அளவில் சேர்கரமாகின்றன.

இவை நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி, கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் ஏற்பட வழிவகுக்கிறது. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது நமது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது

நம் நாட்டில் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடும் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.

அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. ஆகவே கோழி கறி சாப்பிட விரும்புவோர், இயற்கையாக வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை சாப்பிடுவது சிறந்தது. 

what to do husband and wife to reach orgasm at and time

ஆண் பெண் ஒரே நேரத்தில் உச்சகட்டம் அடைவது என்பது பெரும்பாலான தம்பதிகளில் இருப்பதில்லை. ஆணுக்கு விந்து முந்திவிடுவதால் பெண்கள் செக்சில் போதிய திருப்தி அடைவதில்லை. இதனால் குடும்பங்களில் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

ஒரு குடும்பத்தில் உள்ள ஆண், பெண் ஒற்றுமை உடைவதில் இதுபோன்ற ஒற்றுமையில்லாத உடலுறவே காரணம் என செக்சுவல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


ஆணை விட பெண்ணுக்கு உச்சமடைதல் தாமதமாவதற்கு என்ன காரணம்? என்ன செய்தால் ஒரே நேரத்தில் கணவன் மனைவி உச்ச நிலையை அடைய முடியும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் libidinal energy, பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருவது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.

மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடக்கி பிள்ளைகளை அடிப்பது வரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு. மேலும் பெண்களை உச்சக்கட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடக்கி ஜி ஸ்போட் வரை அது தொடர்கிறது.

ஆண், பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதை தவிர வேறு வழி இல்லை. அதாவது ஒரு பெண் கலவியில் சுதந்திரமாக ஈடுபட்டு தன மன நிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவது தான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள் புற விளையாட்டுகளில் foreplay அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.

பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக் erotic site கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக sexual act மாற்ற வேண்டும். பாலியலை நமது தன்மையில் இருந்து ego கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல்  basic instinct என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அணைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும். அதவாது பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதல் வேண்டும்.

ஆண், பெண் இருவரும் செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும் என்பது இறுதியாக ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை. 


Thursday, 29 January 2015

Tamil Nadu government ordered the IAS officer to stop preaching and propagating Christianity




ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கர், கிறிஸ்தவ மதக்கூட்டங்களில் பேசி வருவதற்கு தடைபோட்டிருக்கிறார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இதையடுத்து, ”அரசு போட்டுள்ள உத்தரவுக்கு மேலானது, இயேசு எனக்கு பிறப்பித்து உள்ள உத்தரவு. என்னுடைய உயிரைக் காத்தவர் ஏசு. அதனால் அதைச் செய்தே ஆகவேண்டும். ஆனால், இப்போதைக்கு அரசு உத்தரவுக்கு மரியாதை கொடுத்து, என் பிரசங்க கூட்டங்களை ரத்து செய்து இருக்கிறேன்’ என்று பதில் கூறியிருக்கிறார் உமாசங்கர்.

கூடவே, ‘ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மேலும், சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் நான் என்ன செய்கிறேன் என்பது எல்லாம் என் தனிப்பட்ட உரிமை. நான் மதப்பிரசாரம் செய்யவில்லை. இயேசு பற்றி மக்களிடம் பேசும்போது, அவர்களின் வியாதிகள் குணமாகின்றன… பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை கிடைக்கிறது. இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறதுÕ என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகுமார் மற்றும் சென்னை உயர்நீத்ஹிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கூறியிருக்கும் கருத்துக்களை பார்ப்போம்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகுமார்: , ”அவர் எந்த மதத்தைச் சார்ந்து இருந்தாலும், தனிப்பட்ட வகையில் இந்திய அரசியல் அமைப்பின்படி அதைப் பின்பற்றத் தடை இல்லை. ஆனால், அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொதுஇடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது… அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. நன்னடத்தை விதிகளில் குறிப்பாக, இப்படி எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும், அரசு அதிகாரிகள் இதுபோன்ற காரியங்கள் செய்வதால் பொதுமக்களுக்கு பொது நிர்வாகம் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும்.
ஓர் அரசு அலுவலர் அரசு விதிமுறைகளை மீறும்போது, அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ‘நீ இதைச் செய்யக் கூடாது’ என அறிவுரை செய்திருப்பது தேவையில்லாத செயல். இதுபோன்று கீழ்மட்டப் பணியாளன் செய்தால், அரசு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்குமா… உடனே நடவடிக்கைதானே எடுக்கும். மற்றபடி இது எல்லாம் விளம்பரத்தை தேடிக்கொள்ள செய்யும் செயல்தான்”என்று உமாசங்கரைச் சாடினார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி: ”அரசு அதிகாரிகள் தங்களுடைய மத அடையாளங்களை தனிப்பட்ட முறையில் வைத்து இருப்பதுதான் நல்லது. ஆனால், பல அரசு அதிகாரிகள் இதைக் கடைபிடிப்பது இல்லை. உதாரணத்துக்கு, தேர்தல் கமிஷனராக இருந்த டி.என். சேஷன், பதவியில் இருக்கும்போதே தன்னை சங்கரமட பக்தராக காட்டிக்கொள்ள தவறவில்லை. காவல்துறை அதிகாரிகள் பலரும் சபரிமலைக்கு மலை போட்டபடியே காக்கி உடையில் வருவதையும் காணமுடியும்.
அரசு மருத்துவமனைகள், அரசாங்க அலுவலகங்கள் ஏன் காவல் நிலைய வளாகத்துக்குள்ளேயே கோயில்கள் கட்ட அனுமதிக்கிறார்கள். அனுமதியில்லாமல் கட்டினாலும், அரசு எதிர்ப்பது இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ராஜகோபாலன், அமர்நாத் யாத்திரை சென்று வந்து காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். ‘என்னை இயக்குபவர் இவர்தான்’ என்றபடி தன் சட்டைப் பையில் இருந்து சங்கரசாரியின் படத்தை எடுத்துக்காட்டினார் ராஜகோபாலன். பல நீதிபதிகள் சாய்பாபா கோயிலிலும், மேல்மருவத்தூரிலும் நிற்கும் காட்சிகள் பத்திரிகைகளில் வரத்தானே செய்கின்றன. ராக்கெட் விடும் விஞ்ஞானிகள்கூட ராக்கெட் அனுப்பும் முன்பாக இந்துமத பூஜைகள் செய்கிறார்கள். இது எல்லாம், அரசு ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவையே.
இதுபோன்றவைகள் எல்லாம் அரசால் தடுக்கப்படாதபோது, உமாசங்கரின் பிரசாரத்தை மட்டும் அரசு விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்றால், அது இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைக்கு எதிரானது. வேலை நேரத்திலேயே தன் மத வெளிப்பாட்டை காட்டிகொள்ளும் பல அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கட்டுபடுத்தாதபோது, தன் வேலை நேரம் தவிர்த்து ஓய்வு நேரத்தில் இயேசு பிரசாரம் செய்கிறேன் என்று உமாசங்கர் சொல்வதில் நியாயம் இருக்கிறது. மற்றபடி உமாசங்கரின் பிரசாரம், தினகரன் போன்ற பல பிரசங்கிகள் செய்கிற, அதே கூச்சல்… அலறல் பிரார்த்தனைதான்.

‘யாகம் வளர்த்தால் மழை வரும்’ என்கிற மூடநம்பிக்கைக்கு இணையாகத்தான் இருக்கிறது… ‘ஜெபம் மூலம் நோய் தீரும்’ என அவர் சொல்லியிருப்பது. படித்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் இத்தகைய மூடநம்பிக்கையான பேச்சுகள், எளிய மக்கள் மனதில் அழுத்தமாக பதியும்.

எல்லா மதத்தை சேர்ந்த அரசு அதிகாரிகளும், பொது ஊழியர்களும் இத்தகைய மத சார்ந்த விஷயங்களில் இருந்து தங்களை அற்புறப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் மதவழிபாடு சார்ந்த சின்னங்கள், அடையாளங்கள் வைக்கக்கூடாது என்று 1968 -ல் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. அந்த அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, உமாசங்கரின் வழக்கு உதவும் என நம்புறேன்.
உமாசங்கரின் பிரசாரத்தைப் பகுத்தறிவு கொண்டு நாம் எதிர்ப்பது வேறு… இந்துமத மெஜாரிட்டியைக் கொண்டு ஒடுக்க நினைப்பது என்பது வேறு” என்று சொன்னார்.
Thanks to vikatan.com

Wednesday, 14 January 2015

I Review | ஐ விமர்சனம்

நடிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், ராம்குமார், உபேன் படேல், சுரேஷ் கோபி, ஓஜாஸ் ரஜனி 
 ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம் 
 இசை: ஏ ஆர் ரஹ்மான் 
 பாடல்கள்: கபிலன், கார்க்கி 
 தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் 
 இயக்கம்: ஷங்கர் இரண்டரை ஆண்டுகாலம் இயக்குநர் ஷங்கர் பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ஐ. அபார உழைப்பும் பணமும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா... பார்ப்போம்.

வட சென்னையைச் சேர்ந்த லிங்கேசன் என்கிற லீ (விக்ரம்) ஒரு பாடி பில்டர். பிரபல மாடல் அழகியான எமி ஜாக்சனின் தீவிர ரசிகர். மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டழகனான லீயின் உதவி ஒரு கட்டத்தில் எமிக்கு தேவைப்படுகிறது. தன்னை படுக்கைக்கு அழைக்கும் சக மாடலான உபேன் பட்டேலிடமிருந்து தப்பிக்க, அவனுக்கு பதில் லீயை நடிக்க வைக்கிறார். சீனாவில் விளம்ப ஷுட். ஆரம்பத்தில் நடிக்க கூச்சப்படும் லீயை சகஜமாக்க, விளம்பர இயக்குநரின் ஆலோசனைப்படி காதலிப்பது போல நடிக்கிறார். இந்த விளம்பரப் படத்துக்காக வரும் மேக்கப் நிபுணரான திருநங்கை ஓஜாஸ் விக்ரமின் உடல் அழகைப் பார்த்து மோகம் கொள்கிறார். லீயை எமி உண்மையாக காதலிக்கவில்லை என்ற உண்மையைப் போட்டுக் கொடுக்கிறாcglnfர். உண்மை தெரிந்து மனம் நொந்தாலும், சமாதானப்படுத்திக் கொள்கிறான் லீ. லீ - எமி நெருக்கத்தைப் பார்த்த உபேன் பட்டேல், லீயை காலி பண்ண ஆட்களை அனுப்புகிறான். அவர்களுடன் அபாரமாய் சண்டைப் போட்டு விரட்டியடிக்கும் லீ மீது தானாக காதல் வருகிறது எமிக்கு. இருவரும் புகழ்பெற்ற மாடலாக ஜொலிக்கும் தருணத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயமும் செய்கிறார்கள். அப்போதுதான் லீ மெல்ல மெல்ல தன் உடல் கட்டை இழக்கிறான். முகமெல்லாம் விகாரமாகி, கூன் விழுந்து ஆளே படு கோரமாகிப் போகிறான். இது ஏன் ஏற்படுகிறது. யாரால் ஏற்படுகிறது என்பது மீதி. முழுக்க முழுக்க காதல் கதை என்றாலும், அதை க்ரைம் - ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.
சீனாவின் இயற்கை அழகுகளையும் அந்த ஹல்லேலுஜா மலைத் தொடர்களையும் பளிங்கு நதிகளையும் வெல்வெட் பூத்த பூமியையும் அலுப்பு சலிப்பு இல்லாமல் ரசிக்கும் அளவுக்கு படம்பிடித்த பிசி ஸ்ரீராமுக்கு பெரிய சல்யூட். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடலில் எமியும் விக்ரமும் பறவைகள் போல பறந்து பறந்து காற்று வெளியில் இணைவதுபோல காட்சிப்படுத்தியிருப்பார் ஷங்கர். ரசனையான காட்சி. விக்ரம்... இவரை வெறும் நடிகர் என்று சொல்லிவிட்டுக் கடப்பது ஒரு மாபெரும் கலைஞனை அவமதிப்பதாகிவிடும். நடிப்பதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி மிரட்டியிருக்கிறார் மனிதர். சீனாவில் எமி முதல் முறை தன்னிடம் காதலைச் சொல்லும்போது, விக்ரம் காட்டும் ஒரு ரியாக்ஷன் ஒரு சோறு பதம்.
இந்தப் படத்தில் ஒரு காட்சியில்தான் அவர் எலும்புக்கூடு மாதிரி மெலிந்த தோற்றத்தில் வரவேண்டும். ஆனால் அதற்காக இவர் ஆறுமாதம் மெனக்கெட்டு மெலிந்திருருக்கிறார் என்றால்... இவரை என்னவென்று சொல்வது? முகமெல்லாம் கட்டிகளாக, தலை சீர்குலைந்து, கூன் விழுந்து... இத்தனை விஷயங்களையும் தத்ரூபமாக, இது மேக்கப்.. இது நடிப்பு என்றெல்லாம் யாரும் பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். இன்னொரு தேசிய விருதினை இவருக்குத் தராவிட்டால், அது அந்த விருதுக்கு கவுரவமில்லை! எமி ஜாக்சன்.. சில காட்சிகளில் படு சாதாரணமாகத் தெரிகிறார். சீனா ஷூட்டிங் காட்சிகள் மற்றும் அந்த என்னோடு நீ இருந்தால் பாடல்களில் பேரழகியாகத் தெரிகிறார். உடைக்கு அநாவசிய செலவெல்லாம் வைக்கவில்லை. ஆனால் இந்தக் கதையில் அவரளவுக்கு வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான்.
சந்தானம் தனது டைமிங் வசனங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், அவர் இதில் முழு நீள காமெடியன் இல்லை. நாயகனின் தோழனாக வந்து மனதில் இடம்பிடிக்கிறார். பவர் ஸ்டாருக்கு எந்திரன் கெட்டப் போட்டு நடக்க விட்டு, தன் படத்தை தானே கிண்டலடித்திருக்கிறார் ஷங்கர். திருநங்கை வில்லியாக வரும் ஓஜாஸ் ரஜனி, தொழிலதிபர் ராம்குமார், மாடல் உபேன் பாட்டேல், அந்த பாடி பில்டர் பட்டினப்பாக்கம் ரவி மற்றும் சுரேஷ்கோபி அனைவருமே கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். வில்லன்களுக்கு விதவிதமாக தண்டனைகளை யோசிப்பதில், கருட புராணத்தையே மிஞ்சிவிடுகிறது ஷங்கரின் கற்பனை.

படத்தில் விக்ரமுக்கு இணையான நாயகன் ஏ ஆர் ரஹ்மான். பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி புதிய பரிமாணம் காட்டியிருக்கிறார். மெரசலாயிட்டேன் பாடலின் இரண்டாவது இடையிசை ஒரு நிஜமான இசை விருந்து. என்னோடு நீ இருந்தால், பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல்கள் முதல் முறை கேட்கும்போதே மனதில் ஒட்டிக் கொள்கின்றன. அய்ல அய்ல.. இந்த ஆண்டு முழுக்க இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உதடுகளைப் பிரியாமலிருக்கும். அதேபோல பிசி ஸ்ரீராம். இந்த பூமியில் இத்தனை அழகான இடங்கள் இருக்கிறதா என கேட்க வைக்கிறது அவர் ஒளிப்பதிவு. சண்டைக் காட்சிகளை இத்தனை மிரட்டலாகப் படமாக்க தமிழ் சினிமாவில் வேறு ஆள் இல்லை. அதே நேரம்.. வழக்கமான ஷங்கர் பட பார்முலாவிலிருந்து இம்மியும் விலகவில்லை இந்தப் படம். உடம்பு சரியில்லாமல், கூன் விழுந்த விக்ரம், நாயகியை மணவறையிலிருந்து தூக்கிக் கொண்டு பைப் வழியாக இறங்குவாரே.. அங்கு ஆரம்பிக்கிறது லாஜிக் மீறல். அது படம் முழுக்க தொடர்கிறது. சண்டைக் காட்சிகளில் அதே லாஜிக் மீறல். நூறு பேரை ஒரு ஹீரோ ஓடிக் கொண்டே அடிப்பது. ஒவ்வொரு சண்டையிலும் வில்லன்கள் விக்ரமை அப்படிப் போட்டு அடிக்கிறார்கள். படத்தில் காட்டுவது மாதிரி ஒருவரைப் போட்டு அடித்தால், கூழாகி கொழகொழவென பரவிக் கிடப்பார். ஆனால் நம்ம ஹீரோவை மணல் மூட்டையைப் போட்டு மொத்துவது போல அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் வில்லன்கள். இரும்பு ராடுகளில் வெளுக்கிறார்கள். ஆனால் அவர் கடைசியில் அசால்டாக எழுந்து வந்து வில்லன்களை காலி பண்ணுகிறார். என்ன லாஜிக்கோ...

முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யமும் இனிமையான காட்சியமைப்பும் இடைவேளைக்குப் பிறகு தொலைந்து போகிறது. அடுத்த காட்சி, அடுத்த திருப்பம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்து போவதில், சுவாரஸ்யமில்லாமல் போகிறது. அதேபோல விக்ரமை அந்த நிலைக்கு எப்படி கொண்டுவந்தோம் என வில்லன்கள் ரூம் போட்டு சொல்லும் காட்சியைப் பார்த்தால் ஏனோ எம்ஜிஆர் படம் நம்நாடு நினைவுக்கு வந்தது. அத்தனை பழைய காட்சி அது. திருநங்கையை ஏகத்துக்கும் கேலி செய்வதாக யாரும் சண்டைக்கு வராமல் இருக்க வேண்டும். ஒரு மாணவியை அத்தனை கேவலமான கண்ணோட்டத்துடன் சுரேஷ் கோபி பார்க்கும் காட்சி தேவையா?

உண்மையிலேயே இந்தப் படம் மூன்று மணி பத்து நிமிடங்கள் ஓட வேண்டிய அவசியமே இல்லை. சரியாக 2.15 மணி நேரத்துக்குள் இந்தக் கதையைச் சுருக்கி இருக்க முடியும். படத்தில் இடம்பெறும் இரு பாடல்கள் முழுக்க முழுக்க விளம்பர ஜிங்கிள்கள் மாதிரிதான் காட்சி தருகின்றன. ஒரு பிரமாண்ட விளம்பரப் படத்தை எடுக்க இனி ஷங்கர் - பிசி ஸ்ரீராம் - ரஹ்மானை அணுகலாம் எனும் அளவுக்கு கிட்டத்தட்ட 10 மெகா பிராண்டுகளின் விளம்பரங்கள் படத்தில் இடம்பெறுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்! இவ்வளவு எதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், படத்தை ஒரு முறை அலுப்பின்றிப் பார்க்க முடிகிறது. அதுதான் ஷங்கரின் மேஜிக்!



ஆங்கிலத்தில் விமர்சனம்:

Cast: Vikram, Amy Jackson

Directer: Shankar

Music Director: A.R. Rahman

Cinematographer:    P.C. Sreeram

Editor: Llewellyn Anthony, Gonsalves

Production: Aascar Film Pvt. Ltd.

Vikram plays the character called ‘Lingesan’, who considers Arnold Schwarzenegger as a role model and his only aim in life is to win the Mr. Tamil Nadu title. I movie story about a muscle man (physical power) Vikram as Linges, true love, virus. It’s all starts about Lingesan (Vikram), a bodybuilder son of a Gym owner, Santhanam as Gym Trainee.

Vikram want to achieve the Mr. Tamil Nadu tiltle. His competitor Ravi makes Linges tend to be crazy about Diya (Amy), an advertisement model. Diya had problem with her co-model John, he made sexual harassment. Since Diya denied and ignored him, John crushed her carrier and all her advertisement chance lost.

She only had last advertisement to complete to make her come back and survive in modelling and advertisement field. Before that Santhanam made Linges met Diya for the first time in shooting spot, since John made her lost all her chances, Diya decided to call Linges to be her Model n do advertisement in China. He sacrifices his dream Mr. India for Amy and moves to China.

Ad shoot starts there and director thinks Linges can do well in romance scene, so the director made Diya lied to Linges that she is in love with him. Linges’s makeup artist, a transgender Osma Jasmine fall for Vikram, but Linges in love with Diya.

Osma revealed the truth about Diya’s fake love and made Linges broke apart, but before the shooting over Diya truly falls in love with Linges. This made John and Osma really mad and they tried to kill him in china, but fails. Diya and Linges combo for ad made huge success and his company product sale doubled. John lost all his chances and pushed to do cheap ads.

Owner of the ad company and product owner wanted linges to act in his Juice product Linges denied the offer because it was unhealthy product and he accidently gave an interview to public and said the same in media, this made huge loss for the company.

Juice product owner injected a H4N1 virus to his body, the virus is so called ‘I’. Diya and Linges marriage preparation was on but Linges turns into hunch back slowly, loses his teeth, hair and got ugly look. The family doctor of Diya Vasudevan (Suresh Gopi) treated Linges but failed.

Then Linges hide himself and stopped the wedding and made people to believe that, he is death. Later Diya’s mother made Diya to marry Vasudevan. By the time other Nuero doctor who examine linges with the help of Santhanam get to know about the virus in his body and told Linges that the virus can curable and also about the real face of Vasudevan. Vasudevan is the one Injected virus into his body.

Here goes Linges kidnapped Diya to avoid get married with Vasudevan, but Diya thought Linges was dead and she can’t recognize Linges with hunchback.

What happens next? is rest of the interesting story to be watch.

The concept and Vikram’s multiple get-ups with world-class technical elements are promising and give a fresh experience and wholesome entertainment. The director Shankar has roped in some international personalities to choreograph the action scenes. Hair raising sequences are involved in ‘I’ movie.

Cast Performance:

Vikram keeps a lot of effort to give 100% to his character. He has given his best in whatever he does. Vikram suited for all the get-ups a long haired thick moustached body builder, a handsome hunk, a burly beast and a violent hunchback with an ugly face.

Amy Jackson does a challenging role, also she is glamorous in the film. She performed well. Remaining cast of the film is perfect in their respective roles.

Thursday, 1 January 2015

சல்மான் கான் ரசிகர்களுக்கு சவால் விடும் அஜித் ரசிகர்கள்!


அஜித்தின் ரசிகர் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தல தும்மினால் கூட ட்ரண்ட் தான்.
இன்று என்னை அறிந்தால் படத்தின் ட்ரைலர் வருகிறது என்ற அறிவித்த சில நிமிடங்களிலேயே டுவிட்டரில் #YennaiArindhaalTrailerFeast என்ற டாக்கை கிரியேட் செய்து இந்திய அளவில் இரண்டாவது இடத்தின் ட்ரண்ட் செய்து வந்தனர்.
சல்மான் கான் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உருவாக்கிய #HappyBirthdaySalmanKhan என்ற டாக் முதலிடத்தில் இருக்க, சில மணி நேரங்களில் இதை அஜித் ரசிகர்கள் பின்னுக்கு தள்ளி தற்போது முதல் இடத்தில் நீடித்து வருகின்றனர்.