மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் சல்மான்கான் இலங்கைக்கு விஜயம்!
பிரபல
இந்தி நடிகர் சல்மான்கான் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். இவர் இலங்கை
ஜனாதிபதி ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்காகவே சிறிலங்கா
வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தி
நடிகர் சல்மான்கான் இலங்கை வரவுள்ளார் என ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள்
வெளியாகியிருந்த நிலையில், ஜனாதிபதியின் பிரசார வேலைகளை முன்னின்று ஏற்பாடு
செய்துவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல்
ராஜபக்ச மூலம் இந்த அழைப்பிதழ் அனுப்பட்டு இருந்த நிலையில் இன்று சல்மான்
கான் இலங்கையை வந்தடைந்துள்ளார்.